பாஸ்கர் ஒரு ராஸ்கல் மீண்டும் தள்ளிப்போனது
Posted: Thu,26 Apr 2018 05:25:26 GMT
பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் தயாராகியுள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படம் 2015ம் ஆண்உ மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.
இப்படத்தி அனைத்து பணிகளும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகி இருந்த நிலையில் நிதி சிக்கல், நடிகர் விமல் தொடுத்த வழக்கு என பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு வந்து, அதன் பிறகு தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் காரணமாகவும் இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படது.
ஒரு வழியாக வேலை நிறுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் நாளை இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளாது. அதன்படி மே 11ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 0 comment(s)
Be the first person to like this.