தோணியை கண்டு வியக்கும் கோலி
Posted: Thu,26 Apr 2018 12:45:23 GMT
சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூரை மரண அடி அடித்துள்ளது சென்னை அணி, குறிப்பாக அணித்தலைவர் தோணி ஆடிய தாண்டவத்தில் ஒட்டு மொத்த இந்தியாவும் தல தோணிக்கு விசில் போட்டுக்கொண்டுள்ளார்கள்.
அதில் பெங்களூர் அணி தலைவர் கோலியும் தப்பவில்லை, தோணியின் ஆட்டம் குறித்து பேசியிருக்கும் கோலி. “தோனி இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் மிகவும் நல்ல இடத்தில் இருக்கிறார் (சிஎஸ்கே). அவரை இப்படி பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அவர் எப்போதும் போல நிதானமாக அவரது ஸ்டைலில் ஆடுகிறார். இந்த போட்டி அவருக்கானது. அவரை பாராட்ட வேண்டும்.
தோனி இப்படி ஆடுவதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. அவர் சிக்ஸ் அடிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் எங்கள் அணிக்கு எதிராக அவர் சிக்ஸ் அடிப்பதை பார்க்கத்தான் கஷ்டமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.