உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு
Posted: Thu,26 Apr 2018 12:43:49 GMT
2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2019, மே 30 முதல் ஜூலை 14 வரை, 10 நகரங்களில், 11 மைதானங்களில் இப்போட்டித்தொடர் நடைபெற உள்ளது.
இப்போட்டி தொடரில் இந்திய அணி விளையாடும் அட்டவணை இங்கே
ஜூன் 5 அன்று, இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது
ஜூன் 9 அன்று, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது
ஜூன் 13 அன்று, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது
ஜூன் 16 அன்று, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது
ஜூன் 22 அன்று, இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது
ஜூன் 27 அன்று, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது
ஜூன் 30 அன்று, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது
ஜூலை 2 அன்று, இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது
ஜூலை 6 அன்று, இந்தியா – இலங்கை அணிகள் மோதும் போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற உள்ளது
  • 0 comment(s)
Be the first person to like this.