ஐந்து மாநிலங்களால் இந்தியாவின் வளர்ச்சி பாதிப்பு: நிதி ஆயோக் தலைவர் கருத்து
Posted: Wed,25 Apr 2018 11:57:06 GMT
இந்தியா உலக அளவில் பின் தங்கி இருப்பதற்கு காரணம் ஐந்து மாநிலங்கள்தான் என நிதி ஆயோக் தலைமை நிர்வாகி அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை கழகத்தில் நடத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமிதாப் கந்த், “ இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. கிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து பின் தங்கி வருகின்றன. குறிப்பாக, பீஹார், உ.பி., சத்தீஸ்கர், ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் தான் உலகளவில் சமூக முன்னேற்ற விஷயத்தில் இந்தியா பின் தங்கிய நிலையில் இருக்க காரணம்.
தொழில்கள் முன்னேற நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால், மனித வள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் நாம் பின்தங்கிய நிலையில் உள்ளோம். அப்பட்டியலில் 188 நாடுகள் இடம் பெற்றுள்ளன. நாம், 131வது இடத்தில் இருக்கிறோம். கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா பின் தங்கிய நிலையில் உள்ளது. மாணவர்களின் கற்றல் திறமை மோசமாக உள்ளது. ஐந்தாவது வகுப்பு மாணவனால், இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை. குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்த துறைகளில் நாம் முன்னேற்றம் காண வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.
Page generated in 0.3304 seconds with 21 queries and GZIP enabled on 173.231.211.226.