உறவுகள் தேவையில்லை; கட்சியே முக்கியம் தினகரன் பேச்சு
Posted: Wed,25 Apr 2018 06:14:18 GMT
மன்னார்குடியில் செய்தியாளார்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் இனி வரும் காலங்களில் டிடிவி. தினகரனுடன் இணைந்து செயல்படப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
திவாகரனின் இக்கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் டிடிவி தினகரன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “எதிரிகளின் வலையில் யாரும் விழுந்துவிடக்கூடாது. கட்சியினரோ, குடும்பத்தினரோ யாராக இருந்தாலும் எதிரிகளின் சதியில் சிக்கி விடாதீர்கள்.
எனக்கு உறவு என்பது வேறு, குடும்பம் என்பது வேறு, நான் யாருக்கும் அஞ்சமாட்டேன், எதற்கும் அஞ்சமாட்டேன். கட்சியின் பெயருக்கு யாரும் களங்கம் ஏற்படுத்தக்கூடாது. சமூக வலைதளங்களில் அமமுக பற்றி தவறான கருத்தை பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசியுள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.