ஸ்டாலினுக்கு துதி பாட முடியாது: விஜயகாந்த் பேட்டி
Posted: Wed,25 Apr 2018 06:13:46 GMT
திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டங்களில் தேமுதிக பங்கேற்காதது குறித்து ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.
அப்பேட்டியில், “காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கருணாநிதி கூட்டியிருந்தால் நான் முதல் ஆளாக பங்கேற்றிருப்பேன்.
ஆனால் திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கூட்டங்களும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே இருந்தது. அதுபோன்ற கூட்டங்களில் நானும் பங்கேற்று ஸ்டாலினின் துதி பாட வேண்டுமா?, அதற்கு ஸ்டாலின் என்ன கருணாநிதியா?
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என நாங்கள் விரும்பினோம், ஆனால் திமுகவோ 40 தொகுதிகள் தர தயாராக இருந்தது. அதிகாரப் பகிர்வு என்ற நிபந்னைக்கு ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லை. அது நடந்து இருந்தால் நானும் அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம். இனி ஸ்டாலின் ஒரு போதும் முதல்வராக முடியாது. தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.