அம்பதியை புகழும் தோணி
Posted: Tue,24 Apr 2018 01:46:44 GMT
சென்னை அணி ஐதராபாத் அணியுடன் விளையாடி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் பவுலரின் திறமையால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.
இது குறித்து தெரிவித்திருக்கும் சென்னை அணித்தலைவர் தோணி, “ஐ.பி.எல்., தொடர் துவக்க சீசன்களில் இருந்ததை விட, இப்போது ஆடுகளங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. பேட்டிங்கிற்கு நன்கு கைகொடுக்கிறது. பேட்ஸ்மேன்களும் வலிமையான முறையில் மீண்டு வந்துள்ளனர்.
எந்த பவுலருக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என, திட்டமிட்டு விளையாடுகின்றனர். தீபக் சஹார், ஷர்துல் தாகூர் இருவரும் இளம் பவுலர்கள். இவர்கள், இன்னும் அதிக போட்டிகள் விளையாட வேண்டும். இதில் சஹார், பந்தை நன்கு சுவிங் செய்கிறார். பின் வரிசை பேட்டிங்கிலும் கைகொடுக்கிறார்.
அம்பதி ராயுடுவைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார். இவரை எந்த இடத்தில் களமிறக்கினாலும், சிறப்பாக ரன்கள் சேர்க்கிறார். டாப் ஆர்டர் என்றால், அதிக நம்பிக்கையுடன் செயல்படுகிறார். அடித்து விளையாடும் போது, அதற்குத் தகுந்து தன்னை மாற்றிக் கொள்கிறார். இவரை தொடக்க வீரராக களமிறக்கவே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.