டெல்லியை வீழ்த்திய பஞ்சாப்
Posted: Tue,24 Apr 2018 01:46:03 GMT
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் பூவா தலையா வென்ற டெல்லி அணித்தலைவர் காம்பிர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி, ஆராம்பம் முதலே சொதப்பியது. ஒருவழியாக பஞ்சாப் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்தடுத்து பெரிய அணிகளுடன் ஆட வேண்டி இருப்பதால் பஞ்சாப் அணியில் கெயிலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்ததால் அவர் ஆடவில்லை.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியும் தடுமாறியது. இறுதிவரை கடுமையாக போராடியும் எளிய இலக்கை கூட எட்ட முடியாமல் தோல்வியடைந்தது டெல்லி.
கடைசி ஓவரில், டில்லி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. முஜீப் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் சிக்சர் அடித்த ஸ்ரேயாஸ், அரைசதம் எட்டினார். 3, 4வது பந்தில் 2 ரன். 5வது பந்தில் ஸ்ரேயாஸ், பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் (57) அவுட்டாக, டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.
  • 0 comment(s)
Be the first person to like this.