மோடி சொன்ன 15 லட்சம்: அப்படின்னா என்ன? தகவல் அறியும் உரிமை சட்டம்?!
Posted: Tue,24 Apr 2018 01:42:48 GMT
கடந்த நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் 15 லட்சம் கொடுக்கப்ப்டும் என மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை அப்படி ஏதும் நடைபெறாத நிலையில், தகவல் உரிமை சட்ட ஆர்வலர், மோகன் குமார் சர்மா, 2016ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், ஒரு மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவில் பிரதமர் நரேந்திர மோடி, 2014 லோக்சபா தேர்தலின்போது அறிவித்தபடி,ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்யும் தேதி குறித்து, கேள்வி எழுப்பி இருந்தார்.
இக்கேள்விக்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், “தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி கூறியபடி, ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யும்தேதி, தகவல் உரிமை சட்டப்படி, 'தகவல்' என்ற வரையறைக்குள் அடங்காது. எனவே, இதுகுறித்த பதிலை அளிக்க இயலாது.” என்று தெரிவித்துள்ளது.
  • 0 comment(s)
Be the first person to like this.
Page generated in 0.4136 seconds with 42 queries and GZIP enabled on 173.231.211.226.