ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சுஷ்மா
Posted: Tue,24 Apr 2018 12:54:44 GMT
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா கலந்து கொண்டார்.
அம்மாநாட்டில் பேசிய சுஷ்மா, “இன்று உலகம் பல சவால்களை சந்தித்து வருகிறது. அதில் முக்கியமானது சர்வதேச பயங்கரவாதம். இதனை சமாளிக்க வலிமையான பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அடிப்படை மனித உரிமை, அமைதி மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்கு விரோதமானதாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், பயங்கரவாதிகளை ஒழிப்பதுடன் மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவு, ஊக்கம், நிதி மற்றும் புகலிடம் அளிக்கும் நாடுகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பாவிகளை கொல்வதும், துன்புறுத்துவதும் மனித நேயத்திற்கு எதிரானது. உலகிலிருந்து அகற்ற நாம் இணைந்து இந்த கொடூரத்தை அகற்ற வேண்டும். இதற்காக வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து, பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். ” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.
Page generated in 0.3377 seconds with 21 queries and GZIP enabled on 173.231.211.226.