350 ரூபாய் நாணயம் வெளியீடு
Posted: Wed,28 Mar 2018 08:48:50 GMT
சீக்கிய மத குரு, குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.350 நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாளையொட்டி, ரூ.350 நாணயம் வெளியிடப்பட உள்ளது. 44 மி.மீ., விட்டத்தில், 35 கிராம் எடையில் இந்த நாணயம் உருவாக்கப்படும். இதில் 50 சதவீதம் அலாய் சில்வர், 40 சதவீதம் செம்பு மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் சேர்க்கப்பட்டிருக்கும்.” என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பொதுப்புழக்கத்துக்கு அல்லாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அச்சடிக்கப்படும் எனத்தெரிகிறது.
  • 0 comment(s)
Be the first person to like this.