ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
Posted: Mon,15 May 2017 03:00:00 GMT
இனிப்பு வகைகளில் நறுமணத்துக்காக பயன்படுத்தப்படும் ஏலக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அகட்டு வாய் அகற்றி எனப்படும் ஏலக்காய் வயிற்று உப்புசங்களை குறைத்து வாயுத்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
உடலின் வெப்பத்தை கூட்டக்கூடிய ஏலக்காய், ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இருமல், சளி, கோழைக்கட்டு போன்றவற்றை நீக்கக்கூடியது.
ஏலக்காயின் விதைகள் வயிற்று வலி, வயிற்றுப்புண் ஆகியவற்றை சரிசெய்யக்கூடியது. பித்தத்தை போக்கும் வல்லமை உடைய ஏலக்காய் விந்து உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை உடையது. நீர்சுருக்கை போக்கும், சிறுநீரகக்கல், நரப்புத்தளர்ச்சி, பலவீனம் ஆகியவற்றை போக்கக்கூடியது.
  • 0 comment(s)
Be the first person to like this.
Page generated in 0.3831 seconds with 21 queries and GZIP enabled on 173.231.211.226.